தெரிந்து கொள்ள வேண்டியவை

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னால் ஒரு போராளி: நாராயண் மேகஜி லோகண்டே

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னால் ஒரு போராளி: நாராயண் மேகஜி லோகண்டே

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னால் ஒரு போராளி: நாராயண் மேகஜி லோகண்டே

ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னால் ஒரு போராளி: நாராயண் மேகஜி லோகண்டே

ஆசிரியர் மேசை · September 20,2026 · வாசிப்பு
ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பின்னால் ஒரு போராளி: நாராயண் மேகஜி லோகண்டே

நாம் இன்று வார இறுதி நாளாகக் கொண்டாடி மகிழும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நமக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. கொளுத்தும் வெயிலிலும், இயந்திரங்களின் இரைச்சலிலும் ஓய்வின்றி உழைத்த கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மாமனிதரின் தியாகத்தால் கிடைத்ததுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அவர்தான் நாராயண் மேகஜி லோகண்டே.

கொத்தடிமை போன்ற வேலைச்சூழல் பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்தில், பம்பாய் (இன்றைய மும்பை) மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த நூற்பாலைகளில் தொழிலாளர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு முறையான ஓய்வு நேரமோ, மதிய இடைவெளியோ கிடையாது. பிரிட்டிஷ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட விடுமுறை எடுத்துக் கொண்ட நிலையில், இந்தியத் தொழிலாளர்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டது.

தொழிலாளர் சங்கத்தின் உதயம் மகாத்மா ஜோதிராவ் பூலேயின் 'சத்ய சோதக் சமாஜ்' இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட நாராயண் மேகஜி லோகண்டே, தொழிலாளர்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்தார். தொழிலாளர்களின் துயரங்களைத் துடைக்க நாட்டின் முதல் தொழிலாளர் சங்கமான 'பம்பாய் மில் ஹேண்ட்ஸ் அசோசியேஷன்' (Bombay Mill Hands Association) அமைப்பை 1884-ம் ஆண்டு உருவாக்கினார்.

8 ஆண்டு காலச் சட்டப் போராட்டம் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடனும், ஆலை உரிமையாளர்களுடனும் தொடர்ந்து 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினார் லோகண்டே. இவரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, பம்பாய் மில்Owners Association ஜூன் 10, 1890 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமல்லாமல், பின்வரும் முக்கிய உரிமைகளையும் தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தார்:

மதிய வேளையில் அரை மணி நேர ஓய்வு நேரம்.

காலை 6:30 மணிக்குத் தொடங்கி கதிரவன் மறையும் வரை மட்டுமே வேலை நேரம்.

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம்.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் விடியலுக்காய் போராடிய நாராயண் மேகஜி லோகண்டேவின் சேவையைப் போற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'ராவ் பகதூர்' (Rao Bahadur) மற்றும் 'ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ்' போன்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது. நாம் இன்று அனுபவிக்கும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளுக்குப் பின்னால் இருக்கும் அவரின் தியாகம் என்றென்றும் போற்றுதலுக்குரியது.

things to know